புதுக்கோட்டை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது


புதுக்கோட்டை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 26 April 2022 1:04 AM IST (Updated: 26 April 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது/

புதுக்கோட்டை:
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மொத்தம் 130 மையங்களில் நடைபெறுகிறது.  இதில் முதற்கட்டமாக 11-ம் வகுப்புகளுக்கு 64 மையங்களில் 85 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்புக்கு 66 மையங்களில் 90 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இந்த செய்முறை தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் வருகிற 28-ந் தேதி வரையும், அதன்பின் 28-ந் தேதி முதல் 2-ந் தேதி வரையும் என 2 கட்டமாக நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 82 மையங்களிலும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 68 மையங்களிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 81 மையங்களிலும் நடைபெறுகிறது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வலம்புரி வடுகநாதன் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற்றதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story