பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 12:13 PM IST (Updated: 26 April 2022 12:13 PM IST)
t-max-icont-min-icon

நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் காஞ்சீபுரம் மண்டல நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியினரும் கலந்துக்கொண்டனர்.

அப்போது பாலாற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும், காஞ்சீபுரம் பட்டு நெசவாளர்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Next Story