பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 April 2022 12:28 PM IST (Updated: 26 April 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம், வேதாசலம் நகர், பாரதியார் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகன் விஜய் (வயது 17). இவர் காஞ்சீபுரம் ஆன்டர்சன் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடமாக மனநலம் பாதித்தமும், மருத்துவ சிகிச்சை பெற்றும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் விஜய், வீட்டின் மேல் தளத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story