விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைக்கும் பணி தீவிரம்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் அடுத்த மாதம் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொதுத்தேர்வை 12-ம் வகுப்பில் 4,939 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பில் 5,078 பேரும், 10-ம் வகுப்பில் 5,042 பேரும் எழுதுகின்றனர்.
இதையொட்டி முதற்கட்டமாக நேற்று முன்தினம் முதல் 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பிற்கு நேற்று முதல் செய்முறை தேர்வு தொடங்கியது. இதற்கிடையில் பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
முகப்புத்தாள் இணைப்பு
இதையொட்டி அந்தந்த பள்ளிகளில் விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் விடைத்தாளுடன் முகப்புத்தாளை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதில் 12-ம் வகுப்பிற்கு 5-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பிற்கு 10-ந்தேதி தொடங்கி, 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பிற்கு 6-ந்தேதி தொடங்கி, 30-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.
பொதுத்தேர்வையொட்டி அந்தந்த பள்ளிகளில் பாடவாரியாக விடைத்தாளுடன் முகப்புத்தாளை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முகப்புத்தாளில் மாணவ-மாணவிகளின் பெயர், ஏ, பி, சி என 3 பார்கோடுகள், மாணவர்களின் போட்டோ, பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story