ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 10:38 PM IST (Updated: 26 April 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு

கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்பட்ட அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், தரமற்ற அரிசியை ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யும் விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவினை ரத்து செய்யக்கோரியும் நேற்று கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையம் அருகில் ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.பி.காளியப்பன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன், மாவட்ட பொருளாளர் கே. கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஆர்.நாகராஜ் வரவேற்று பேசினார். 

இதில் மாநில தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மதுக்கரை போன்ற பகுதியில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story