மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு


மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 April 2022 10:38 PM IST (Updated: 26 April 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் நகர கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். 

அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கிராவல் மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, மண் கடத்தியதாக ஆனைமலையை சேர்ந்த சங்கர் (வயது 26), டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த வெங்கடாச்சலமூர்த்தி (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story