புதுச்சேரியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து - கலால்துறை எச்சரிக்கை


புதுச்சேரியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து - கலால்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 April 2022 4:05 PM IST (Updated: 28 April 2022 4:05 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார்கள் வந்தால், கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால், விற்பனையகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலையில் விற்பனை செய்யக்கூடாது எனவும், அது குறித்து புகார்கள் வந்தால் கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story