ஆண்களுக்கான மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக, மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி ஆண்களுக்கு மட்டும் 2021-2022-ம் ஆண்டுக்கான போட்டி, நாளை(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள், காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அணிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள், மண்டல போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் வீரர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story