ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 11 பெண் தொழிலாளர்கள் படுகாயம்
பாவூர் கிராமம் அருகே எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ சாலை ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
காஞ்சீபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு காஞ்சீபுரம் வெம்பாக்கம் தாலுகா வயலாத்தூர் கிராமத்திலிருந்து 11 பெண் தொழிலாளர்கள் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது பாவூர் கிராமம் அருகே எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ சாலை ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த 11 பெண் தொழிலாளர்கள் மற்றும் டிரைவர் உட்பட 12 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story