ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 12:33 PM IST (Updated: 1 May 2022 12:33 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன் (வயது 32). கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் வீராவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி (30) மற்றும் வெங்காடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக மிதுன்சக்கரவர்த்தி, ஆகாஷ் உள்பட 4 பேர் துணையோடு வீராவை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மிதுன் சக்கரவர்த்தி புரட்சி பாரதம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story