கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 May 2022 10:23 PM IST (Updated: 2 May 2022 2:38 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.

கோவை

கோவை தெற்கு உக்கடம் பிலால் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 27). இவர் உக்கடம் லாரி பேட்டையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாகுல்ஹமீது பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story