பெருங்குடி குப்பை கிடங்கில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பாராட்டு
பெருங்குடி குப்பை கிடங்கில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த 27-ந் தேதி மாலை திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலமாக கிளறி அதில் தண்ணீர் பாய்ச்சியும், குப்பைகள் மீது மணலை கொட்டியும் குப்பைகள் மீது கொட்டியும் சுமார் 15 ஏக்கர் பகுதிகளில் புகைந்து வந்த நெருப்பை முழுமையாக கட்டுப்படுத்தினர்.
இந்தநிலையில் குப்பை கிடங்கில் எரிந்த தீயை முழுமையாக அணைக்க இரவு-பகல் பாராமல் பணியாற்றிய மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள், ஊழியர்கள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி சால்வை அணிவித்து பாராட்டினார்.
Related Tags :
Next Story