சிறுவனை கடத்த முயன்ற தொழிலாளி கைது
பொள்ளாச்சி அருகே சிறுவனை கடத்த முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
கருத்து வேறுபாடு
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 31), ஆட்டோ டிரைவர். இவர் புஷ்பா என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தருண் விக்னேஷ் (7) என்ற மகனும், தர்ஷினி (5) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஆனந்தராஜூம், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். மகன் தருண் விக்னேஷ் ஆனந்தராஜூடன் உள்ளார். இந்த நிலையில் வீட்டின் முன்பு தருண் விக்னேஷ் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவனை கடத்தி செல்ல முயன்றார். உடனே சிறுவன் சத்தம் போட்டதை கேட்டு ஆனந்தராஜும், அவரது தங்கை தேவியும் ஓடி வந்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளி கைது
இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த யேசு தினேஷ் (38) என்பதும், தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது.
மேலும் யேசு தினேசிற்கும், புஷ்பாவிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே புஷ்பா தனது மகனை பார்க்க வேண்டும் என்று யேசு தினேசிடம் கூறி உள்ளார்.
இதனால் யாருக்கும் தெரியாமல் சிறுவன் தருண் விக்னேசை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யேசு தினேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story