கோவையில் 151 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு


கோவையில் 151 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
x
தினத்தந்தி 4 May 2022 11:05 PM IST (Updated: 4 May 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 151 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

கோவை

தமிழ்நாடு காவல்துறையில் 1997-ம் ஆண்டு 2-ம் நிலை காவலர் பணியில் சேர்ந்த 151 பேர் கோவை மாநகரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு பதவி உயர்வு பெறுபவர்கள் மொத்தம் 25 ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். 

இதில் 10 ஆண்டுகள் ஏட்டுகளாக பணி புரிந்திருக்க வேண்டும்.
இதன்படி, கோவை மாநகரில் பதவி உயர்வு பெற்றவர்களில் 136 பேர் உள்ளூர் போலீஸ் நிலையங்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திலும், 15 பேர் ஆயுதப்படையில் ஏட்டுகளாகவும் பணியாற்றியவர்கள். 

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Next Story