குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்


குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 5 May 2022 3:23 PM IST (Updated: 5 May 2022 3:23 PM IST)
t-max-icont-min-icon

குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வினோபா தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 70). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரஞ்சிதம் (65). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதம் அருகில் உள்ள வீட்டில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். கோவிந்தசாமி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது, நேற்று அதிகாலை அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது‌. வீடு எரிந்ததை பார்த்த கோவிந்தசாமி அலறியடித்து வெளியே ஓடினார். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். குடிசை வீடு எரிந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story