தவறி விழுந்த மருத்துவமனை ஊழியர் பலி


தவறி விழுந்த மருத்துவமனை ஊழியர் பலி
x
தினத்தந்தி 6 May 2022 11:04 PM IST (Updated: 6 May 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மருத்துவமனை ஊழியர் பலியானார்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 32). இவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி தேனியில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஆண்டிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டிப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் தவறி விழுந்தார். 

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story