காஷ்மீர் தொகுதி மறுவரையறை அறிக்கையை நிராகரிக்கிறோம் - பாகிஸ்தான்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 7 May 2022 6:14 AM IST (Updated: 7 May 2022 8:58 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு தொகுதி மறுவரையறை செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 

இந்த ஆணையம் நேற்று முன்தினம் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீரின் சட்டசபை தொகுதிகள் 83-ல் இருந்து 90 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீர் தொகுதி மறுவரையரை ஆணையத்தின் அறிக்கையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய துணை தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. 

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கையை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை காஷ்மீரின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களின் வாக்குரிமை நீக்கம் மற்றும் அதிகாரமின்மை செய்வதை நோக்கமாகக் கொண்டது" என கூறப்பட்டுள்ளது.

Next Story