வால்பாறையில் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரிப்பு


வால்பாறையில் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 10:56 PM IST (Updated: 7 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறை

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் காலம் தொடங்கிவிடும். இந்த காலத்தில்  சிவப்பு சிலந்தி பூச்சி, தேயிலை கொசு, கொப்பள நோய் போன்ற நோய்கள் தேயிலை செடிகளை அதிகளவில் தாக்கும்.

 மேலும் வறட்சி காரணமாக தேயிலை செடிகளும் காய்ந்து போய் விடும். எனவே ஏப்ரல், மே மாதங்களில் பச்சை தேயிலை உற்பத்தி அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பெரியளவில் பாதிக்கும். 

இதனால் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் ஏப்ரல், மே மாதங்களில் தேயிலை செடிகளை வறட்சியில் இருந்து பாதுகாக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து தேயிலை செடிகளை பாதுகாத்து வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு வால்பாறை பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. மேலும் ஏப்ரல் மாதத்திலும் அவ்வபோது பலத்த மழை பெய்தது. கோடையில் கிடைத்த மழையின் காரணமாக வால்பாறையில் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்து உள்ளது.

Next Story