சேவல் சூதாட்டம்; 3 பேர் கைது
சேவல் சூதாட்டம்; 3 பேர் கைது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி செல்லம் காட்டு தோட்டம் செல்லும் வழியில் இட்டேரி பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிணத்துக்கடவு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பளாங்கரை பகுதியை சேர்ந்த கரிகாலன்(வயது 49), கஜேந்திரன்(30), மணிவாசகம்(33) ஆகிய 3 பேர் சேவல் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்கள், ரூ.400 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சேவல் சூதாட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனாலும் சிலர் அத்துமீறி செயல்படுகின்றனர். இனிமேல் சேவல் சூதாட்டம் நடத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story