சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்


சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 May 2022 10:30 PM IST (Updated: 8 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வால்பாறை

வால்பாறையில் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

வால்பாறையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு கடந்த 5-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து தன பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஆகியன நடைபெற்றது. 

பின்னர் 6-ந் தேதி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் யாக சாலை அலங்காரம், முருகப்பெருமானுக்கு முதற்கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று 2-ம் கால யாக பூஜை, 3-ம் கால யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. 

திருக்கல்யாணம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, மண்டப ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாத்ரா தானம், தீபாராதனை நடந்தது. 

இதையடுத்து மாலை 3 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 
இதில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 
நாளை(திங்கட்கிழமை) அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story