பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் - எச்.ராஜா
பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:-
இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.1 கோடியை கொடுத்து விட்டு பஸ் நிலையம் அமைத்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ரூ.1 கோடி கொடுத்து பஸ் நிலையம் அமைத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் என நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல. தனி நபர்கள் கோவிலுக்காக தங்களது நிலங்களை தானமாக எழுதி கொடுத்துள்ளனர்.
திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் மெட்ரோ ரெயிலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தொட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தொடக்கூடாது. கோவில் நிலங்களில் அரசோ, போலீசோ ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. இந்து கோவில்கள் அபகரிப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story