ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு போலீஸ்காரர் பலி


ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 10 May 2022 6:12 PM IST (Updated: 10 May 2022 6:12 PM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு போலீஸ்காரர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரது சொந்த ஊர் திண்டுக்கல். பூந்தமல்லி பகுதியில் உள்ள 15-வது பட்டாலியனில் போலீசாக சேர்ந்த அவர், தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராஜம்மாள் (43). இவர்களுக்கு பிரபாகரன் (18) என்ற ஒரு மகன் உள்ளார். 

நேற்று காலை சரவணன், திருவள்ளூருக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து அண்ணனூர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார விரைவு ரெயிலில் அடிபட்டு போலீஸ்காரர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story