பிளஸ்-1 பொதுத்தேர்வை 4,824 பேர் எழுதினார்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 4,824 பேர் எழுதினார்கள்.
பொள்ளாச்சி
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 2,432 பேர், மாணவிகள் 2,698 பேர் என மொத்தம் 5,130 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு நடந்தது. இந்த தேர்வை மாணவர்கள் 2,262 பேரும், மாணவிகள் 2,562 பேரும் என 4,824 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 170 பேர், மாணவிகள் 136 பேர் சேர்த்து 306 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாற்றுத்திறனாளிகள் 26 பேர் தேர்வு எழுதினார்கள்.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்கள் பிளஸ்-1 தேர்வு எழுத லதாங்கி மெட்ரிக் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.
பறக்கும் படை
தேர்வர்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதை தவிர தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினர் அவ்வப்போது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்தனர்.
இது தவிர அந்தந்த தேர்வு மையங்களில் நிலையான பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் மாணவ-மாணவிகள் எழுதுவதை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வு எழுதி வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
எளிதாக இருந்தது
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதவில்லை. தற்போது முதல் முறையாக பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதுவதால் தேர்வு எழுத செல்லும் முன் பயமாக இருந்தது. மேலும் வினாத்தாள் எளிதாக இருக்குமா என்ற சந்தேகத்தில் சென்றோம்.
ஆனால் தமிழ் தேர்வில் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிதாக இருந்தது. பாடபுத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் இருந்ததால், அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முடிந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story