கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு


கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 10 May 2022 7:16 PM GMT (Updated: 2022-05-11T00:46:27+05:30)

திருச்சியில் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி, மே.11-
திருச்சியில் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செக்கு கல்வெட்டு
திருச்சி- திண்டுக்கல் சாலையில் புங்கனூர் பஞ்சாயத்தில் உள்ளது நெடுமலை கிராமம். இங்கு வாடிவாசல் கருப்பு கோவிலுக்கு அருகே உள்ள களத்துமேட்டுப் பகுதியில்முட்புதர்களுக்குஇடையே பாறையில்செக்குகல்வெட்டுஎழுத்துப்பொறிப்புடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெடுமலைகிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் கொடுத்த தகவலின் பேரில், திருச்சியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் பாலபாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்மாணிக்கராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.76 சென்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 சென்டி மீட்டர்உள்விட்டமும் கொண்டஇந்தசெக்கானது13சென்டிமீட்டர்விட்டத்தைக்கொண்ட துளையுடன் காணப்பட்டது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானைப்போன்ற குழியுடன்எண்ணெய்ஆட்டுவதற்கானஅமைப்புடன்அமைக்கப்பட்டுள்ளது.இந்த செக்கில் 3 வரிகளுடன் கூடியஎழுத்துகளைக் பதித்துள்ளனர்.
கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்தது
எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இந்த செக்கு கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரியவந்தது. மேலும் செக்கிற்கு வடமேற்கே 150 அடித் தொலைவில் உள்ள மற்றொரு பாறையில் தலை உடைக்கப்பட்ட அய்யனார் சிற்பமும் இருந்தது. பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்கு பொதுவாக கல்செக்கு செய்து தருவது வழக்கம்.
மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துவர். பொதுவாக திருச்சியில் செக்கு கல்வெட்டுகள் அதிகம் கிடைக்காத நிலையில்இந்தசெக்குகல்வெட்டுமுக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதன் பழமையையும், வரலாற்றுச் சிறப்பையும் கருதி இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சின்னங்கள் தமிழகத்தின் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்றும் பாலபாரதி கூறி உள்ளார்.

Next Story