உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து வழிபடும் பெற்றோர்


உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து வழிபடும் பெற்றோர்
x
தினத்தந்தி 11 May 2022 10:29 PM IST (Updated: 11 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து பெற்றோர் வழிபாடு செய்தனர்.

காஞ்சீபுரம்,  

காஞ்சீபுரம் வேதாசலம் நகரில் வசித்து வருபவர் கருணாகரன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகன் ஹரிஹரன் (வயது 48). செவிலிமேடு ஊராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக இருந்துள்ளார்.

இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி வீட்டுக்கு அருகிலேயே பெற்றோர்கள் சிறிய கோவில் ஒன்றை கட்டி அதில் மகனின் சிலையை வடிவமைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

Next Story