தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் துடிதுடிக்க பலி
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி,
விசாகப்பட்டினத்தில் மதுரவாடா தெலுங்கு தேச கட்சியின் இளைஞரணி தலைவர் சிவாஜிக்கும் சுஜனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதனிடையே தாலி கட்டுவதற்கு முன்பாக மந்திரங்களோடு சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென மணமகள் சுஜனா, மயங்கி விழுந்தார். மணமகன் மடியில் விழுந்த அவர், உயிரிழந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
மணமகள் விஷம் குடித்ததால் தான் உயிரிழந்தார் என்பது உறுதியானது. திடீரென மணமகள் திருமணத்தன்று விஷம் குடித்து உயிரை மாய்ப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story