மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்திய ஆசிரியர்கள்


மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்திய ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 16 May 2022 12:30 AM IST (Updated: 15 May 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவை ஆசிரியர்கள் நடத்தினர்.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் நகராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வடமழை ரஸ்தா அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளிகளில் வழக்கமாக ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றால் அல்லது பணி ஓய்வு பெற்றால் பிரிவு உபசார விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிகளுக்கு செல்ல உள்ள மாணவர்கள் 25 பேருக்கு ஆசிரியர்கள் சேர்ந்து பிரிவு உபசார விழா நடத்தி உள்ளனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கேக் வெட்டினர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விருந்தும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் கருணாநிதி, அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றனர்.

Next Story