நத்தம் அருகே புரவி எடுப்பு திருவிழா
நத்தம் அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
நத்தம்:
நத்தம் அருகே பட்டணம்பட்டியில் பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் ஊராளிபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சாமி சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
அப்போது அங்கு சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தும், ஆடுகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்தநிலையில் நேற்று மாலை வர்ணகுடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் சாமிகள் ஊர்வலமாக பட்டணம்பட்டி மலை அடிவாரத்திற்கு சென்று, அங்கு இருப்பிடம் சேர்ந்தனர். அப்போது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story