டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்


டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்
x
தினத்தந்தி 18 May 2022 1:26 AM IST (Updated: 18 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே திருவிழாவிற்கு நன்கொடை தராததால் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பீர்பாட்டிலால் 7 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.

திருவாரூர், மே.18-
திருவாரூர் அருகே திருவிழாவிற்கு நன்கொடை தராததால் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பீர்பாட்டிலால் 7 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
திருவாரூர் அருகே உள்ள வண்டாம்பாளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் திருவாரூர் அருகே காணூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மேற்பார்வையாளராக உள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை டாஸ்மாக் மதுக்கடையில் ரமேஷ் இருந்தபோது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரிடம் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை கேட்டுள்ளனர். 
அதற்கு அவர் நன்கொடை தர மறுத்ததால் அந்த கும்பல் ரமேஷிடம் தகராறு செய்தனர். இதனால், டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ரமேஷ் அங்கிருந்த கிளம்ப முயன்றார். 
பீர் பாட்டிலால் தாக்குதல்
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த கும்பல் திடீரென பீர் பாட்டிலை உடைத்து ரமேசின் கையில் குத்தினர். இதில் படுகாயமடைந்த ரமேஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story