மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 May 2022 1:30 AM IST (Updated: 18 May 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் குமார்(வயது 45). சாக்கு தைக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டீ தேவனூர் கூட்டுரோட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிசசை பலன் இன்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் பலியான குமாரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்‌. இதுபற்றிய தகவலறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு தரப்பில் உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story