பணித்தள பொறுப்பாளர் பணி நீக்கம்
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட ஆவணங்களில் முறைகேடு செய்ததால் பணித்தள பொறுப்பாளரை பணி நீக்கம் செய்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
திருவாரூர்:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட ஆவணங்களில் முறைகேடு செய்ததால் பணித்தள பொறுப்பாளரை பணி நீக்கம் செய்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
ஆவணங்களில் முறைகேடு
திருவாரூர் ஒன்றியம் பள்ளிவாராமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடுவாய்க்கால் தூர்வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பள்ளிவாரமங்கலம் பணித்தள பொறுப்பாளர் ஜெயந்தி என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்த பதிவேடுகள் மற்றும் ஆவணங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
பணித்தள பொறுப்பாளர் பணி நீக்கம்
இதை தொடர்ந்து பணித்தள பொறுப்பாளர் ஜெயந்தியை பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் பணித்தள பொறுப்பாளரிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை அவ்வப்போது ஆய்வு செய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story