போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகள் ஷர்மிளாவும், ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும் கடந்த 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ராஜா, ஷர்மிளா இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story