மாட்டுக்கறி உணவக உரிமையாளருக்கு கத்திக்குத்து
மாட்டுக்கறி உணவக உரிமையாளருக்கு கத்தியால் குத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே மாட்டுக்கறி உணவகம் நடத்தி வருபவர் சக்திவேல்(வயது 38). இவரது உறவினரான மணி என்பவர், துறைமங்கலம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ.200-க்கு மீன் வாங்கிக்கொண்டு பிறகு பணம் தருவதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் குமாரின் உறவினரான சந்திரராஜா(35) மற்றும் அவரது நண்பர் சூரியகுமார்(25) ஆகிய ஆகியோர் சக்திவேலின் கடைக்கு சென்று சக்திவேலிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு சக்திவேல், மணியிடமே பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறில் சக்திவேல் தாக்கப்பட்டதோடு, அவரை சூரியகுமார் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சக்திவேல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியகுமார், சந்திரராஜா ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.