பெண்ணை தாக்கும் ஆணின் கையை உடைப்பேன்- சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசம்


படம்
x
படம்
தினத்தந்தி 18 May 2022 5:16 PM IST (Updated: 18 May 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஒரு பெண்ணை தாக்க துணியும் ஆணின் கையை உடைப்பேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை, 
மராட்டியத்தில் ஒரு பெண்ணை தாக்க துணியும் ஆணின் கையை உடைப்பேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. கூறியுள்ளார். 
 பெண் தொண்டர் மீது தாக்குதல்
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த திங்கட்கிழமை மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு ஒரு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் உள்பட 4 பேர் கியாஸ் விலை உயர்வு குறித்து மனு கொடுக்க சென்றதாக தெரிகிறது. 
இது அங்கு கூடியிருந்த பா.ஜனதா தொண்டர்களுக்கு ஆத்திரத்தை எற்படுத்தியது. அப்போது சிலர் அந்த பெண்ணை தாக்கினர். இது தொடர்பாக பா.ஜனதாவினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், அந்த கட்சியின் நிறுவனர் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே நிருபர்களிடம் கூறியதாவது:-
 கையை உடைப்பேன்
ஒரு ஆண் ஒரு பெண்ணை தாக்குவது மராட்டிய கலாசாரத்துடன் எந்த வகையிலும் ஒத்துபோகாத ஒன்றாகும். இது சாகு மகாராஜ், மகாத்மா புலே, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மராட்டியமாகும். அவர்கள் எப்போதும் பெண்களை மதித்தார்கள். 
நான் சொல்கிறேன். இனிமேல் மாநிலத்தில் ஒரு பெண்ணை அடிக்க யாரேனும் கை ஓங்கினால், நானே அங்கு நேரில் சென்று அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன். அவரது கையை உடைத்து அவரிடமே ஒப்படைப்பேன். 
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story