வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் சாவு


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 18 May 2022 5:17 PM IST (Updated: 18 May 2022 5:17 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்து அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள ஓடைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்த நிலையில் போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரது மனைவி சுதா (வயது 30) நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாடு இருக்கிறதா அல்லது மழையில் எங்காவது சென்றுவிட்டதா என்று பார்ப்பதற்காக  நிலத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடையை கடக்க முயன்ற போது சீறிப்பாய்ந்து சென்ற மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story