வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கடத்தி கற்பழிப்பு- வாலிபர் கைது
பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய 11 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய 11 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காணாமல் போனதாக புகார்
பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 14-ந் தேதி இரவு படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறினாள். பின்னர் வசாயில் இருந்து மின்சார ரெயிலில் ஏறி தாதர் புறப்பட்டு சென்றாள். இது பற்றி அறியாத பெற்றோர் தங்கள் மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சிறுமியை தேடிவந்தனர்.
இதற்கிடையில் தாதர் சென்ற சிறுமி தனது வீட்டிற்கு செல்ல மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் வசாய் ரெயில் நிலையம் வந்து இறங்கினாள்.
கடத்தி கற்பழிப்பு
வீட்டிற்கு சிறுமி தனியாக நடந்து சென்றதை அறிந்த வாலிபர் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் என அறிவுரை கூறி தனது வீட்டில் தங்கி விட்டு காலையில் செல்லலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய சிறுமியை வாலிபர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி கற்பழித்தார்.
2 மணி நேரம் கழித்து அதிகாலை 4 மணி அளவில் பாதிக்கப்பட்ட சிறுமியை தனியாக ரோட்டில் விட்டு விட்டு வாலிபர் தப்பி சென்று விட்டார்.
வாலிபர் கைது
அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி தெரிவித்தாள். இதையடுத்து போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் ஆரிப் சேக்(வயது34) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.
சுமார் 12 மணி நேரத்தில் ஆரிப் சேக் போலீசாரிடம் பிடிபட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story