விவசாயிகளுக்கு பண்ணை எந்திரங்கள்
கடையம் அருகே விவசாயிகளுக்கு பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் பாப்பாங்குளம் அருகே உள்ள வெள்ளிகுளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பண்ணை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொண்ரானி தலைமை தாங்கினார். கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன், பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பண்ணை எந்திரங்களான நெல் நடவு எந்திரம்-1, பவர்டில்லர்-2, ரோட்டோவீட்டர்-2 குழுவிற்கு வழங்கினார்கள். துணை வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் அபிராமி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் மாடசாமி, பொருளாளர் அகத்தீஸ்வரி, செயலாளர் முருகன் மற்றும் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாப்பான்குளம் வேளாண்மை உதவி அலுவலர் தீபா செய்திருந்தார்.
Related Tags :
Next Story