பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் உள்வாங்கியது.
பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் உள்வாங்கியது.
ராமேசுவரம்,
பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் உள்வாங்கியது.
கடல்சீற்றம்
ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தனுஷ்கோடி பகுதியிலும் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் 3-வது நாளாக நேற்றும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் மும்பையில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகம் செல்ல வந்து பாம்பன் பகுதியில் 6-வது நாளாக தூக்குப்பாலத்தை கடக்க முடியாமல் இழுவை மற்றும் மிதவைக் கப்பல் ஒன்றும் தென்கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கடல் உள்வாங்கியது
பாம்பன் தென் கடல் பகுதியில் சீற்றமாக காணப்பட்டு வந்த நிலையில் வடக்கு கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப் ்பட்டது. இதனால் ஏராளமான நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் மணல் பரப்பாக காணப்பட்ட கடற்கரை பகுதியில் தரை தட்டிய நிலையில் கிடந்தன. மீண்டும் பகல் 12 மணிக்கு பிறகு கடல் நீர் உயர தொடங்கி இயல்பு நிலைக்கு திரும் பியது. ஒருபுறம் கடல் உள்வாங்கி இருந்த நிலையில் தென் கடலான மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
மீன்பிடிக்க செல்லவில்லை
இதுபற்றி பாம்பனை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, இந்த காற்று சீசனில் கடல் நீர் உள்வாங்குவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் இயல்பான ஒன்றுதான் என்றும் இதனால் எந்த ஒரு பயமும் கிடையாது என்றும் தெரிவித்தனர். பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமேசு வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட ஊர்களில் அதிகமான நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
Related Tags :
Next Story