திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டம்


திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 5:45 PM IST (Updated: 18 May 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பகவான் கவுதம புத்தர் பிறந்தநாள் புத்த பூர்ணிமா விழா, டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், தமிழ் தேசிய தந்தை பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் என முப்பெரும் விழா சமத்தவ நாள் பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடந்தது. கூட்டத்திற்கு,  தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். விழாவில் 700 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஆற்றலரசு, கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன்,  மாநில துணை பொது செயலாளர்கள் கலைவேந்தன்,  வில்லவன் கோதை, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணை செயலாளர் மதுரை மாலின், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர்கள் செல்லப்பாண்டியன், அமுதன் துரையரசன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அரசூர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட துணை செயலாளர்கள் தோப்பூர் லெட்சுமி, நகர செயலாளர்கள் மாணிக்கம், அல்அமீன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் நகர செயலாளர் உதயா நன்றி கூறினார்.

Next Story