நாலாட்டின்புத்தூரில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சேதம்
நாலாட்டின்புத்தூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சேதம் அடைந்தன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள நாலாட்டின் புதூர் சர்வீஸ் ரோட்டில் கிருஷ்ணசாமி (வயது 40), கோமதி (53) ஆகியோருக்கு சொந்தமான சலூன் கடைகள் மற்றும் குருசாமி ( 37) என்பவருக்கு சொந்தமான டீ கடையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து. சலூன் கடையில் படுத்திருந்த வாலிபர் கார்த்திக் ( 25) அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டார். நாலாட்டின் புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். 2 மணி நேரம் போராட்டத் திற்கு பின்பு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இத் தீ விபத்தில் 3 கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்தில் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், கடைகளில் இருந்த டி.விக்கள், பிரிட்ஜ், செல் போன் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story