திரு-பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திரு-பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
காரைக்கால்
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திரு-பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினத்தில் ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூஜை விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா நடக்கிறது.
வருகிற ஜூன் 6-ந் தேதி இரவு பேழையில் இருந்து (பெட்டி) அம்பாளை எழுந்தருளச்செய்யும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது. 7-ந் தேதி சீர்வரிசை எடுத்துவருதலும், 8-ந் தேதி அதிகாலை பெரும் தளியல், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் காரைக்கால், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வல்லவன் (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது. நிரவி -திரு.பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன் கூட்டத்தில் கலந்துகொண்டு, விழாவில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும், அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், செங்குந்த மரபினர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகள் கூறினர். கூட்டத்தில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு பஸ்
கூட்டத்தின் முடிவில் கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பூஜை விழாவில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்யவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், 2 நாட்களுக்கு சிறப்பு பஸ் இயக்கவும், தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனம், சிறப்பு மருத்துவ சேவை ஆகியவை தயார் நிலையில் இருக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபடவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்கு புதுச்சேரியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் வல்லவன் கூறினார்.
Related Tags :
Next Story