சங்கரன்கோவிலில் சிறப்பு ரெயில்கள் நின்று செல்ல கோரிக்கை
சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி-விருதுநகர் வழித்தடத்தில் தென்காசி மற்றும் ராஜபாளையத்தை அடுத்து மூன்றாவது அதிக வருவாய் தரும் ெரயில் நிலையமாக சங்கரன்கோவில் ெரயில் நிலையம் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியை விட அதிக வருவாய் ஈட்டினாலும் தற்போது இயக்கப்படும் நெல்லை- தாம்பரம், நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ெரயில்கள் சங்கரன்கோவில் ெரயில் நிலையத்தில் நிற்பதில்லை.
வருமானத்திலும். பயணிகள் பயன்பாட்டிலும் சிறந்து விளங்கும் சங்கரன்கோவில் ெரயில் நிலையத்தில் சிறப்பு ெரயில்கள் நின்று செல்லாது என்ற தகவல் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சங்கரன்கோவில் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story