வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த 2 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 18 May 2022 7:41 PM IST (Updated: 18 May 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

மான்கூர்டில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 
மும்பை மான்கூர்டு பகுதியில் கடந்த 15-ந் தேதி பாலாஜி நாயுடு (வயது22) என்பவருடன் சல்மான் சேக் (22), கணேஷ் ரெட்டி ஆகிய 2 பேர் சேர்ந்து சிறு பிரச்சினை காரணமாக வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து பாலாஜி நாயுடுவை கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்த பாலாஜி நாயுடுவின் தலை அங்கு கிடந்த பாறாங்கல் மீது மோதியது. இதனால் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். 
 உயிரிழந்ததை அறிந்த 2 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். 
தகவல் அறிந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கொன்ற 2 பேரை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் அப்பகுதியில் நடமாடிய 2 பேரை மறுநாள் போலீசார் பிடித்து கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story