7 கோவில்களின் ரூ.89 லட்சம் நிலம் மீட்பு
திருச்சி மாவட்டத்தில் 7 கோவில்களின் ரூ.89 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
திருச்சி, மே.19-
திருச்சி மாவட்டத்தில் 7 கோவில்களின் ரூ.89 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட நிலம்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் என அறிவித்தது. அதன்படி, கடந்த 7.5.2021 முதல் 31.3.2022 வரை தமிழகத்தில் மீட்கப்பட்ட நிலங்கள் குறித்த கையேட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள 167 கோவில்களின் 1,184.13 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம், 467.0884 கிரவுண்டு மனை நிலம், 47.0813 கிரவுண்டு நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என 1,375 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2,566 கோடியே 94 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 7 கோவில்களின் 2.93 ஏக்கர் பரப்பளவு நிலம், 4,968 சதுர அடி மனை நிலம், 1,111 சதுர அடி கட்டிடம், 74,052 சதுர அடி குளம் ஆக்கிரமிப்பு நிலம் என 19 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.89 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் வாரியாக விவரம் வருமாறு:-
1.ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1,036 சதுர அடி கட்டிடம் மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். 2.திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 6 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். 3. மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.87 ஏக்கர் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
போஜீஸ்வரர் கோவில்
4.மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காசுக்காரப் பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான 4,436 சதுர அடி மனை நிலம் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.18 லட்சம். 5. திருவெறும்பூர் அருகே வேங்கூர் கிராமம் சாம்பகமூர்த்தி அய்யனார் கோவிலுக்கு சொந்தமான 74,052 சதுர அடி பரப்பளவிலான குளத்து நிலம் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
6.திருச்சி பெரியகடை வீதியில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு சொந்தமான 75 சதுர அடி கட்டிடம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். 7. சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான கண்ணனூர் மேற்கு கிராமத்தில் உள்ள போஜீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 532 சதுர அடி மனை நிலம் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
நிலவுடமைப்பதிவு மேம்பாட்டு திட்டத்தவறுகள் குறித்த மேல்முறையீடு மூலமும் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன. திருச்சி மண்டல இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆண்டிக்குரும்பலூர் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 24 சென்ட் பரப்பளவிலான நிலம் மீட்கப்பட்டது.
கோவில் பெயரில் மாற்றம்
கோவில் நிர்வாகத்தால் மேல்முறையீடு செய்து மீண்டும் கோவில் பெயரில் நிலம் மாறுதல் செய்யப்பட்ட வகையில், திருச்சி மாவட்டம் தொட்டியம் பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலின் 37 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
கடந்த 10 மாதங்களில் திருச்சி மண்டலத்தில் 7 கிராமங்களில் கோவிலுக்கு சொந்தமான 3,598.52 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story