தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 2பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 23). இவருக்கும் தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த ரவி மகன் வேல்முருகன் என்ற பானா வேல்முருகன் (29) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. நேற்று முன்தினம் தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகர் பாலம் அருகே கணேசன் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு வந்த வேல்முருகன் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கணேசனிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார்களாம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் என்ற பானா வேல்முருகன் மற்றும் சிறுவனையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட வேல்முருகன் என்ற பானா வேல்முருகன் மீது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story