ஊட்டி பிஎஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் இதய பரிசோதனை


ஊட்டி பிஎஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் இதய பரிசோதனை
x
தினத்தந்தி 18 May 2022 8:03 PM IST (Updated: 18 May 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி பிஎஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் இதய பரிசோதனை

ஊட்டி

ஊட்டியில் உள்ள பி.எஸ். மருத்துவமனையின் டாக்டர் அருண் ஹரி கூறியதாவது:- நீலகிரி மாவட்ட மக்கள் அனைத்து சிகிச்சைகள் பெறும் வகையில் பி.எஸ். மருத்துவமனை ஊட்டியில் தொடங்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக இதய அறுவை சிகிச்சை மருத்துவம் கிடைக்கும் வகையில் காருண்யா இருதாலய மருத்துவ பிரிவின் மூலம் தற்போது இருதய மருத்துவ பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.3,530 நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனை குறைத்து தற்போது ரூ.999 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் இதய பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் கிராமத்தில் அவசர மருத்துவ தேவை மற்றும் இருதய சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. மேலும் அந்த ஆம்புலன்சில் டாக்டரும் சென்று வரும் வகையில் முதன் முறையாக செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பி.எஸ். மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் உடன் இருந்தார்.


Next Story