குன்னூரில் இருந்து பொன்மலை பணிமனைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்ட டீசல் என்ஜின்
குன்னூரில் இருந்து பொன்மலை பணிமனைக்கு பராமரிப்புக்காக டீசல் என்ஜின் கொண்டு செல்லப்பட்டது.
குன்னூர்
குன்னூரில் இருந்து பொன்மலை பணிமனைக்கு பராமரிப்புக்காக டீசல் என்ஜின் கொண்டு செல்லப்பட்டது.
மலை ரெயில்
நீலகிரி மாவட்டம் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் போக்குவரது ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. மலை ரெயில் நிலக்கரி நீராவி என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டன. நாளடைவில் நிலக்கரி தரமாக இல்லாத காரணத்தாலும், என்ஜின் அடிக்கடி பழுதானதாலும் மலை ரெயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்ப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு குன்னூர் வாட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில்களை டீசல் என்ஜின் மூலம் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி திருச்சி பொன்மலையிலுள்ள லோகோ பணிமனையில் டீசல் என்ஜின் உருவாக்கப்பட்டது. இதையடுத்து டீசல் என்ஜின் குன்னூர் -ஊட்டி மற்றும் ஊட்டி -குன்னூர் இடையே மலை ரெயிலுக்கு இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் பராமரிப்பு பணி
ஆனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே பல் சக்கர தண்டவாளம் என்பதால் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுகிறது. குன்னூர் லோகோ பணிமனையில் 4 டீசல் என்ஜின்கள் உள்ளன. இந்த என்ஜின்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஒரு டீசல் என்ஜினின் பராமரிப்புக்காக குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டது. நீராவி பர்னஸ் ஆயில் என்ஜினை அடுத்து ஒரு பெட்டியும் அடுத்து டீசல் என்ஜினும், அதனை அடுத்து ஒரு பெட்டியும் இணைத்து அனுப்பபட்டது. இந்த டீசல் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப் பட்டு அங்கிருந்து திருச்சிக்கு அனுப்பப்பட்டது. இந்தப்பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
---------------
Related Tags :
Next Story