திருச்செந்தூரில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருச்செந்தூரில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 May 2022 8:11 PM IST (Updated: 18 May 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்செந்தூர்:
 திருச்செந்தூர் நகராட்சி சார்பில் பொதுமக்கள் மற்றும் வணிக கடைகளுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் வேலவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர் வெற்றிவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சிவ.ஆனந்தி பொதுமக்கள் மற்றும் கடைளுக்கு மஞ்சள் பையை வழங்கி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுத்தினார்.
நிகழ்ச்சியில், நகராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா, முத்துகுமார், ரேவதி, ஆறுமுகம், மஞ்சுளா, சுகாதார மேற்பார்வையாளர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story