முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு


முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக  பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 18 May 2022 8:16 PM IST (Updated: 18 May 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கணக்கெடுப்பு தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, புலி, மான்கள், செந்நாய்கள், கரடிகள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பருவ மழைக்கு பின்பு என வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் (உள் மண்டலம்) முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி சரக பகுதியில் முதற்கட்டமாக கடந்த வாரம் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி ஒரு வாரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக புலிகள் காப்பகத்தின் (வெளி மண்டலம்) சீகூர், சிங்காரா மற்றும் வடகிழக்கு சரிவு வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 19-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 23-ஆம் தேதி வரை நடக்கிறது.

பயிற்சி

இதையொட்டி வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள வன ஊழியர்கள், தன்னார்வலர் களுக்கான பயிற்சி முகாம் முதுமலை தெப்பக்காடு உள்ள வன உயிரின மேலாண்மை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை இயக்குநர் அருண், வனச்சரகர்கள் முரளி, காந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அப்போது கணக்கெடுப்பு பணியின்போது நேரடி மற்றும் மறைமுக தடயங்கள் மூலம் வனவிலங்குகளை அடையாளம் காணுதல், மாமிச உண்ணிகளின் வாழ்விட பயன்பாடு, தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு, வாழ்விடம், பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story