ஊட்டியில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
ஊட்டியில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
ஊட்டி
ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து காந்தல் பகுதிக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் மூர்த்தி (வயது 56) ஓட்டினார். பஸ்சை இயக்கும் போது, அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர் மூர்த்தியை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மூர்த்தி ஊட்டி அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி காலை பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால், ஊட்டியிலிருந்து காந்தல், பிங்கர் போஸ்ட், தலைகுந்தா உள்பட பல்வேறு வழித்தடத்தில் நகர பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story